Tuesday, October 13, 2009

என் தேவதை கண்விழிக்கிறாள்


மேகமே வழிவிடு
என் தேவதை வருகிறாள்
வானமே வாய்திற
அவள் வாழ்த்துப் பாடு
விண்மீன்களே
கண்சிமிட்டி
அவளை காயப்படுத்திவிடாதீர்கள்
சூரிய நெருப்பே கொஞ்சம்
குளிர்ந்துபோ
நிலவே
உன் மௌனப் புன்னகையால்
அவள் பாதங்களுக்கு
ஒளிபாய்ச்சு
ஓடி விழும் நதிகளே
அவள் இடையின்
நடனதோடு இசைந்துபோங்கள்
புல்வெளியில்
பூத்த முத்துக்களே
அவள் மார்பிற்கு
மணிசூடுங்கள்
பூஞ்செடிகளே
உங்களுக்கு என்ன வேலை
உங்கள் பூக்களை அவிள்த்து
அவள் கூந்தல்ச்செடியில்
கொலுவேற்றுங்கள்
தென்றலே போ
போய் றோஜாக்களில்
ஆடைநெய்துவா
வண்ணத்துப் பூச்சிகளே
நீங்கள் தேனெடுக்கும்
மலரல்ல அவள்
போய் அருகிருந்து
சாமரம் வீசுங்கள்
புறாக்களே
திசைகளெல்லாம் போய்
சேதி சொல்லிவாருங்கள்
சாரல் மழையே
குளிப்பாட்ட நீ தயாராகு
இன்னும் என்ன
புள்ளி மானே
காவலிரு
எல்லாம் சரிதானா
கதிரவனே இப்போது
உன் கதிர்களை வீசு
உங்கள் தேவதை
கண்விழிக்கப்போகிறாள்

No comments: