Monday, December 19, 2011

யாகம்


காதல்,
அதற்கு
நீ உயிர்
நான் அதன் ஜடம்

கருத்தரிக்கும் சூழ்நிலைதான்
கிட்டவே இல்லை

நீ வராமலே
முடிந்துவிட்டது என்
ஜாகம்

நீ தாண்டி வராதது
கடவுளின் தடைக்கற்களையா?...
சாத்தானின்
சாப எல்லைகளையா?...

நான்(கள்) அழிந்து நாம் மிஞ்சும்
வேள்வித் தீ - காதல்
இதில்
நீயும்... நானும்...
தனித்தனியாய் மிஞ்சும்
வேதியல் விளைவுகள்தானா!

தியானச் சிலையுருவும்
சமர்ப்பணங்களும்...
சர்வ வல்லமையும் தீர்ந்துபோக...
நீ வராமலே முடிந்துவிட்டது
என் யாகம்

No comments: