1.
சனம் கூடி இழுத்ததில்
தெருவுக்கு வந்தது தேர்
நீ முதன் முதலில்
சேலை கட்டி வந்தாய்
ஊர்ச் சனத்தை இழுத்து
தெருவில் விட்டுவிட்டு
2.
நான்
அழகாகத்தான்
உன்னை இரசித்தேன்
நீதான்
அவசரப்பட்டு
தாவணியை சரிசெய்து
உன்னை
அசிங்கப்படுத்திவிட்டாய்
3.
என் தோட்டத்து
இழவரசிகளில்
ஒருத்தி
மகாராணியாக
முடி சூடப்படுகிறாள்
உன் கூந்தல்
சிம்மாசனமேறி - கூந்தல்பூ
4.
திருவிழாக் கூட்டத்தில்
தேர்கூட சிலவேளை
தொலைந்துபோகும்
நீமட்டும் எப்படி
எந்தத் திசையிலும்
தெரிகிறாய்
5.
பூமரங்களும்
கல் வீசத்தொடங்கிவிட்டன
என் மீது
எனக்கென்ன தெரியும்
அவைகளுக்கும் உனக்கும்
அழகுத்தகராறு சந்தியில்
நிற்குமென்று
6.
பூக்களுக்கும் நான்
பொல்லாதவனாகிவிட்டது
காதலால்தான்
என்னசெய்வது நீ
பூக்களில் வந்து
சிரிக்கிறாய்
7.
உன்
விழிகளின் இராணுவம்
என் வயதை
ஆக்கிரமித்ததில்
மெல்லினச் சிரிப்பு
அணைகிற உன்
உதட்டோரம்
அகதியாக நான்
8.
கடவுள் வருகிறார்
கவனம்
சந்தியில் பேசிக்கொண்டார்கள்
இப்போத்துதான்
கடவுளுக்கு சொல்லிவிட்டு வருகிறேன்
அந்தத் தெருவில்
நீ வருகிறாய்
கவனம்
9.
உன் குரல்
கேட்ட நாழி
என் நாடி நரம்புகள்
உன்னைக் கேட்டு
நச்சரிக்கத் தொடங்கிவிடுகின்றன
10.
என் கனவுகளில்
நீண்ட நாட்களாக
பூப்பறிக்கும் யாரோ ஒருத்தி
காற்று ஆடையாக
நெய்துகொண்டு
அவளை சுற்றிய
நீண்ட தாவணி நளுவி
என் முகத்தில்
விழுகிறது - புன்னகை
11.
உன்
பார்வைகளுக்குப் பயந்து
இமைக்கதவுகளை
இழுத்து மூடி
என் இருதய
இராச்சியக் கோட்டையில்
ஒழிந்துகொண்டேன்
ஆயிரம்கோடி
பூக்கள் அணிவகுத்து
யுத்தம் நடத்தி
ஆட்சி பிடித்து
சிம்மாசனம் ஏறியிருக்கிறாய்
நீ
12.
உன்னை
முளுமையாக
புரிந்துகொண்டவன்
நானில்லை
காரணம் நான்
உன்னை நேசிக்கிறேன்
13.
காதலின்
சிறகு
மனசின் சிறை
அடையுண்டது
எனக்குள் நான்
14.
என்றாவது
ஒரு நாள்
கார்றின் கருவறையில் இருந்து
வயிற்றை கிழித்துக்கொண்டு
வருமா - உன்
மௌனம் வார்த்தைகளாகி
15.
பருவகாலம்
தீர்ந்தபின்
திரும்புகிற பறவைபோல
பிரிந்துசெல்கிறாய் -நீ
தங்கியிருந்த உன்
தடங்களை கலைத்து
அப்படியே போட்டுவிட்டு
16.
உன்
கண்ணாடிக் கண்மலர்
குவளையில்
நிறைந்துபோயிருக்கிறேன்
நான்
எந்த ஒரு
மார்றமும் இல்லாமல் நீ
இருதயப் பாலைவனத்தில்
புதைகுழி ஒன்றை
தோண்டிக்கொண்டிருக்கிறாய்
எனக்காக
17.
வரம்தான் கேட்டேன்
நான்
வரம்தான் கொடுத்தான்
அவன்
வரமாய் கிடைத்த
சாபம் காதல்
18.
யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு
என்னை கைபிடித்து
அளைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே
என் மீதிவளி சேர்வதெப்படி
இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி
19.
நீ
இரவிலும்
நினைவு வெளிச்சம் தந்தது
என் பகல்களையும்
சேர்த்தே இருட்டாக்கவா
20.
உன் புன்னகைகள்
என்னுள்
றோஜாக்களோடு
முட்களையும் பிரசவித்தன
இப்போது
றோஜாக்கள் உதிர்ந்துவிட
முட்களோடு வாழ்கிறேன்
நான்
21.
எப்படியோ
காதலின் ஆயனால்
சபிக்கப்பட்ட நான்
உன்
கனவுகளின் சாத்தானால்
அர்ச்சிக்கப்படுகிறேன்
22.
நாட்கள்
நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது
அன்பே
நான் மட்டும்
காத்திருக்கிறேன்
நீ விட்டுப்போன
அதே இடத்தில்
நின்று
23.
எந்தச் சில்வையில்
என்னை அறைந்தாலும்
காதலில் உயிர்பெற்று வருவேன்
அன்பே
அடுத்த ஜென்மத்திலாவது
காத்திரு
24.
புனிதமானவற்றை
கடவுளுக்கு கொடுப்பார்கள்
நானும் எனது காதலை
கடவுளிடம் கொடுத்துவிட்டேன்
பலிகடாவாக
மனைவியாய் வரப்போகிறவளுக்கு சொல்ல நினைத்தது
25.
எத்தனை தடவை
நினைத்து நினைத்து
வெட்கி
தலையணைக்குள்
ஒழித்டிருப்பாய்
உன் புன்னகைகளை - என்னை நினைத்து
26.
அம்மனுக்குச் சாத்திய
பட்டுச்சேலை
அத்தனை அழகென்று
ஊரெல்லாம் பேச்சு
இந்த அம்மனுக்கு
யாரிடம்
போட்டி போடுவதென்ற
விவஸ்த்தையே கிடையாது
பார்
இன்றைக்கு
உன்னால் எத்தனை
சேலைக்கடை
கசங்கப்போகிறதோ
26.
உன் புன்னகைகளை
செலவளித்துவிடாதே
பிறகு
என் முத்தங்களை
எங்குபோய் விற்பேன்
நான்
No comments:
Post a Comment