Friday, September 12, 2008

உதயவிழி நிலவில்


ஒருத்திக்கு கொடுத்த
இதயம்
பாவிக்கபடாமல் வெறுமையாகவே
திரும்பி வந்திருகிறது.
அதன் பெயர் கூட மாற்றபடாமல்
இன்னும்
அவள் பெயரில் தான் இருக்கிறது.

அழுக்குப்படாமல்
இரத்தம் சிந்தாமல்
பத்திரமாய் திருப்பி கொடுத்து விட்டாள்.
எதற்காக என்றே புரியவில்லை.
ஒரு தரம் கூட - அவள்
படித்துக்கூடப் பார்க்கவில்லை.
நானும் நியாயம் கேட்கவில்லை.

ஏதோ ஒரு பொழுதிலேனும்
அதற்கான
சரியான பதிலை - அவள்
மனக்காகிதத்தில் எழுதியிருக்கலாம்.
அதை காலத்தெருவில்
ஏதோ ஒரு தொலைவில்
தொலைத்துவிட்டிருக்கலாம்.

அந்த
உதயவிழி நிலவில்
உயிர் சாய்ந்த காலம்
நினைவெங்கும் பசுமை
படர்ந்து கிடக்கிறது.

அவளுக்கே என்று
தந்துவிட்ட
என் இருதயத்தை
எழுதி கிழித்திருக்கலாம்.
ஏனோ
அவளே எழுதாமல்
இடம் விட்டிருக்கிறாள்.
யாரோ ஒருத்தி எழுதுவதற்காக
அந்த ஒரு சொல்
வெற்றிடத்தை...

7 comments:

Mathu said...

மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் . Nice kavitha.

ப. அருள்நேசன் said...

ஹாய், நிறையவே ஆச்சரியம் தரும்
அழகான விருந்தாளி நீங்கள் என்பதை
முகத்துக்கு நேரே சொல்லிவிடுகிறேன்

என் புதிய முயற்சிகளுக்கு வாசலிலேயே
வந்து வாழ்த்தும் நல்ல மனத்திற்கு நன்றி

அழகான வாழ்த்துக்கும் நன்றிகள்.

நட்புடன் ஜமால் said...

\\ஒருத்திக்கு கொடுத்த
இதயம்
பாவிக்கபடாமல் வெறுமையாகவே
திரும்பி வந்திருகிறது.
அதன் பெயர் கூட மாற்றபடாமல்
இன்னும்
அவள் பெயரில் தான் இருக்கிறது.\\

மிகவும் ஆழமான காதல்

நட்புடன் ஜமால் said...

\\அழுக்குப்படாமல்
இரத்தம் சிந்தாமல்
பத்திரமாய் திருப்பி கொடுத்து விட்டாள்.
எதற்காக என்றே புரியவில்லை.
ஒரு தரம் கூட - அவள்
படித்துக்கூடப் பார்க்கவில்லை.
நானும் நியாயம் கேட்கவில்லை.\\

இரத்தம் சிந்தி - வற்றி போயிருக்கும் ...

ப. அருள்நேசன் said...

ஜமால் வாங்க,

//மிகவும் ஆழமான காதல்//

நீங்களாவது புரிந்துகொண்டீர்களே

//இரத்தம் சிந்தி - வற்றி போயிருக்கும் ...//

இப்படி எல்லாம் கடிக்கக்கூடாது,,,

ஜியா said...

உதயவிழி நிலா.... தலைப்பே செமயா இருக்குது... உங்களுடைய பெயர் கூட (சஹாராவின் புன்னகை) வித்தியாசமா அழகா இருக்குது... உங்க கவிதைய போலவே :))

ப. அருள்நேசன் said...

வாங்க ஜீ

முதன் முதலா வந்திருக்கிறீங்க, சகாராவின் புன்னகையையும் பாருங்க, உங்களை அன்புடன் வரவேற்பதோடு .வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

//உதயவிழி நிலா.... தலைப்பே செமயா இருக்குது... உங்களுடைய பெயர் கூட (சஹாராவின் புன்னகை) வித்தியாசமா அழகா இருக்குது... உங்க கவிதைய போலவே :)) //

ம்ம்
நன்றி ஜீ,