Wednesday, May 27, 2009

மது


தலை கோதி வந்த
காற்றை
இருதயத்திற்குள் கடத்தி
ஒரு நூறு சூறாவளியை
செய்து
என்னை துவசம் செய்துவிட்ட
கோதை - நீ
தெளியாத போதை

0 0 0 0

பேசிக்கொண்டிருந்தோம்
இரவு வந்தது
தூங்கப்போனேன்
விடிந்துவிட்டது

0 0 0 0

இமைத் தூரிகை
வண்ணம்பூசி
சுவரெல்லாம்
உனது பிம்பங்கள்

0 0 0 0

இசைக்கின்ற
காற்றிலெல்லாம்
உன் குரல்
என் செவி நிறைய
குவிந்து கிடக்கின்றன
உனது வார்த்தைகள்

0 0 0 0

இப்பொளுது தான் பேசிமுடித்தோம்
மீண்டும் நலமா என்கிறாய்
காதல்
தீரா நோயாச்சே
நலமாவதெப்படி

0 0 0 0

இது என்ன நியாயம்
உன்னைத்தவிர வேறு யாருடனும்
பேசக்கூடாதென்கிறாய்
மணிக்கொருமுறை சண்டையிட்டுக்கொண்டு
நீயும் பேசமாட்டேனென்கிறாய்

0 0 0 0

ஆயிரம் கட்டளைகளால்
என்னை சிறைவைத்துவிட்டு
நீமட்டும் சுதந்திரமாய்
பறந்துவிடுகிறாய்

0 0 0 0

பெண்களே
பெண்ணிய விடுதலை பற்றி
பேசமுன்பு
வாரத்தில் ஒருமுறையேனும்
உங்கள் காதலர்களுக்கு
கட்டளைச் சிறையிலிருந்து
விடுப்பை அறிவியுங்கள்

0 0 0 0

கண்மணி-

விரும்பிச் சுமக்கின்ற அவஸ்த்தை
காதல்

உன் எல்லா அவஸ்த்தைகளிலும்
இருக்கின்ற வலிதான் காதல்