Sunday, March 15, 2009

காற்று - நான் - அவள்


என் இருதயக் கதவுகளை
ஒருமுறை இறுக்க மூடி
உன்னை நினைக்கிறேன்
என் எல்லாத் திசையிலும்
நீதான் இருக்கிறாய்

என் சர்வமும்
நீயாக உணர்ந்த ஒருபொழுதில்
நான் விடுதலையானேன்
பூலோகத்திலிருந்து

ஆயிரம் சாமங்களின்
தூங்காத் தவிப்போடு
என் கனவொன்றில்
விழித்துக்கொண்டாய் நீ
அந்தக் கனவு
காய்கிறபோது
பூமி மீண்டும்
இருட்டிக்கொண்டது

அதிகாலை மலர்ந்த
பூக்கள்
எதிலுமில்லாத
நறுமணத் தாரகை
ஒன்றை கடந்துவந்த
காற்று
முட்டி மோதி நின்றது என்னில்
திரும்மிப் பார்த்துக்கொண்டே வந்ததில்

தீண்டாத உன்
கைகளின் மென்மையை
தீண்டித் தீண்டி
சொல்லிக்கொண்டிருக்கிறது
காற்று என்னிடம்

என்னை
தொந்தரவு செய்துவிட்டு
காதலாக வீசிய காற்று
மீண்டும் புறப்பட்டது
அவள் சுவசத்தில்
சுதியேற்றிக்கொண்டு

கற்றின் காதலையும்
தழுவலையும்
ஏற்றுக்கொண்டு
கிறங்குகையில்
என்காதலை நிராகரித்தாள்
என் பார்வைகளை
வெளியே தள்ளி
இமைக்கதவுகளை
மூடி