Tuesday, December 27, 2011

நீ ஊருக்கு போகிறாயாம்!...


[சகாரா, அம்மு என்கிற ஒரு புதியவரை அறிமுகம் செதுவைக்கிறது. கதை, கட்டுரை, ஆய்வுரை, கவிதை இப்படியான வளமையான வடிவங்களுக்கூடாக அல்லாமல், ஒரு கடிதத்துடன் அவரை இங்கே அறிமுகம் செய்துவைக்கிறது சகாரா. இது பதிவிடுதலுக்காக என்று சொல்லி எழுதப்பட்டதல்ல, எதேற்சையாக நிகழ்ந்த ஒரு அழகான உரையாடலின் தொடர்ச்சியாய் வந்த ஒரு சாதாரண கடிதம்தான் இது. அவருடைய சம்மதங்களுடனேயே இந்த கடிதம் இங்கே பதிவிடப்படுகிறது. நண்பர்களே, அவரை நீங்களும் ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் அம்மு ]


தகவல் கிடைத்த போது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.சங்கதிகள் எப்போதும் சந்தோசம் மட்டுமே தருவதில்லையே....

தந்திகள் தரும் தந்தி மீட்டல்களில் அவ்வப்போது சோக ராகமும் பாடப்படுவதுண்டு.எனக்கும் அப்படித்தான்.......

பரீட்சைக்காய்த் தன்னைத் தயார் செய்யும் பரீட்சார்த்தி போல்,உன் பிரிவுகளுக்காய் என்னை முன்னாயத்தம் செய்து கொண்டேன்....

மூண்று நாட்கள் முழுசாய்ப் பார்க்கவில்லை.சுகமாய் வலித்தன உன் பிரிவுகள்.

சந்தோசம் கொடுக்கும் வலிகள் எப்பவும் சுகமாகவே வலிக்குமாம்.உனக்கு கிடைக்கப் போகும் பெரிய சந்தோசம் உன் பயணம்.

அப்போ அது எனக்கு கஸ்டமாவா இருக்கும்? சந்தோசமாகவே ஏற்றுக்கொண்டேன்..கூடவே உன் பயணம் சிறப்பதற்காய் மனம்
வாழ்த்திசைக்க ஆரம்பித்துவிட்டது..

நான் அறிந்தவர்கள்,என்னைத் ஆறிந்தவர்கள் ஊருக்குப் போகும் போதெல்லாம் மனம் அடியாய் அடித்துக்கொள்ளும்...

நான் வாழ்ந்த ஊருக்கு போகிறார்களே......ஏன் அவர்களாக நான் இருக்கக் கூடாது? என்று.என் தடுமாற்றத்திற்கு இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.

வளர்ந்த ....வாழ்ந்த....மண் மீது பிரியம் யாருக்குத்தான் இல்லை சொல்லுங்க? எனக்கு இப்போது ஒன்று எண்ணத் தோண்றுகிறது.

''என் இரு கண்களில் ஒன்று நீ'' என்று நீ சொன்னது ஏன் மெய்யாகக் கூடாது என்று....அல்லது என் கண்களில் ஒண்றைத் தானமாய்த் தருகிறேன்.....

உன் கூடவே எடுத்துச் செல்வாயா? எனக்கு செல்லம் தரும் அப்பா,அம்மா.எனக்கு செல்லமான தம்பிகள் அனைவரையும் பார்த்து விடுகிறேன்..அப்பப்போது உன்னையும்தான்

கூடவே என் கால் சென்ற இடங்களுக்கெல்லாம் உன்னைக் கூட்டிச்செல்கிறேன்.....உன் கால்கள் காட்டும் இடங்களையும் பார்த்து வரலாம்.என்ன சொல்கிறாய்?

வேண்டாம்...நான் கேட்கும் எதுவுமே நடக்காதது.....அப்படியாயின் நடப்பது எது?

அ...ஆ....ஒன்று செய்யலாம்....எனக்காய் சில நலங்கள் சொல்வாயா?

என் இனிய வீடு,அதன் அழகிய முற்றம்...அதிலே என் முழங்கால் சிந்திய ரத்தம்...அத்தனையும் பத்திரமா என்று. கேள்

வாசற் துளசிச் செடியையும் அதை வலம் வந்த என் பாதச் சுவடுகளையும் கேள்...நலமா என்று.

மறக்காமல் நாள் தோறும் எனக்காய்ப் பூக்கும் மல்லிகையைச் செடியையும் மறக்காமல் கேட்டுவிடு.

என் அடி வாங்கிய கொய்யா.என் வடிவான ரோசா...என் பாடல் கேட்ட மழை,எல்லாவற்றையும் நான் பல முறை கேட்டதாகச் சொல்.

பால்ப் பண்ணை றோட்டில் இருக்கும் மிஸ்ரர் கிருஷ்ணாவிடம் கேள் என்னை நினைவிருக்கிறதா என்று......

ஓக்கே...இப்ப இவளவும் போதும்..இன்னும் பட்டியல் நீண்டால்...உன் விடுமுறை போதாமல்ப் போய்விடும்...ஆதலால் என் விசாரிப்புக்களை நிறுத்திக்கொள்கிறேன்.


''உன் பயணம் சந்தோசத்தைக் கொடுக்கட்டும்''

எழுதியவர் - அம்மு

2 comments:

ஷர்புதீன் said...

NICE

சகாரா said...

வாங்க நண்பர் ஷர்புதீன்

உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி